முகப்பு பக்கத்திற்கு செல்லுங்கள்
மெனுவை திறக்க கிளிக் செய்யவும்
மெனுவை மூட கிளிக் செய்யவும்
முக்கிய உள்ளடக்கத்தை தொடங்குங்கள்

ஹகுசியா® பூஞ்சைக் கொல்லி

ஹகுசியா® சிறந்த பூஞ்சைக் கொல்லிகளில் ஒன்றாகும், இது புதிய செயல் முறை மற்றும் புதிய வேதியியல் செயல்திறனைக் கொண்டு உருளைக்கிழங்கு பயிரில் பின் கருகல் நோயைக் கட்டுப்படுத்த உதவுகிறது. பின் கருகல் நோயைக் கட்டுப்படுத்துவதற்கான முந்தைய சூத்திரத்தைக் காட்டிலும் இந்த புதிய செயல் முறை சிறந்த வேதியியல் செயல்திறனைக் கொண்டுள்ளது.



ஹகுசியா® நோய்த்தடுப்பு மற்றும் ஆரம்பகால குணப்படுத்தல் பயன்பாட்டிற்குச் சிறந்தது மற்றும் பயனுள்ள பூச்சிகள் மற்றும் ஒட்டுண்ணிகளுக்கு எதிராகவும் ஒப்பீட்டளவில் பாதுகாப்பானது.

சுருக்கமான தகவல்

• இது ஒரு நவீன பூஞ்சாணகொல்லியாகும், இதில் ஒரு தனித்துவமான மூலப்பொருளான ஃப்ளூபிகொலைடு உடன் ப்ரோபமோகார்ப் ஹைட்ரோகுளோரைடு அடங்கியுள்ளது

• இது இலைகள், தண்டுகள் மற்றும் காம்புகளில் முழுமையாகவும் சீராகவும் பரவுகிறது

•வலுவான எதிர்ப்பு மேலாண்மை காரணமாக இது நீண்டகால தீர்வுகளைக் காட்டுகிறது

•வெப்பநிலையைப் பொருட்படுத்தாமல் நோய்களின் நேரடி மற்றும் மறைமுகப் பரவலை இது திறம்பட கட்டுப்படுத்துகிறது

செயலிலுள்ள பொருட்கள்

  • ஃப்ளோபிகொலைடு 5.56% w/w + புரோபமோகார்ப் ஹைட்ரோக்ளோரைடு 55.6% w/w எஸ்சி

தயாரிப்பு குறித்த பார்வை

ஹகுசியா® பின் கருகல் நோயைப் பரவாமல் கட்டுப்படுத்தி, தொற்றுநோயையும் கொல்கிறது. இது நோய்த்தொற்றின் அனைத்து 5 நிலைகளிலும் செயல்படுகிறது மற்றும் பூஞ்சைகளின் பாலியல் மற்றும் பாலிலா இனப்பெருக்கம் இரண்டையும் கட்டுப்படுத்துகிறது. இதன் மூலக்கூறு மழை எதிர்ப்புத்திறன் கொண்டுள்ளது, எனவே நோய் பரவுவதற்கு உகந்த மேகமூட்டமான வானிலையிலும்கூட சிறந்த முடிவுகளை அளிக்கிறது; இது தாவரத்தின் புதிய வளர்ச்சியையும் பாதுகாப்பதால் நீண்ட கால கட்டுப்பாடு உறுதி செய்யப்படுகிறது. ஹகுசியா® நோய்த்தடுப்பு மற்றும் ஆரம்பகால குணப்படுத்தல் பயன்பாட்டிற்கு மிகவும் பொருத்தமானது மற்றும் நன்மை பயக்கும் பூச்சிகள் மற்றும் ஒட்டுண்ணிகளுக்கு எதிராக ஒப்பீட்டளவில் பாதுகாப்பானது.

பயிர்கள்

பயிர்கள், இலக்கு பூச்சிகள், பயன்படுத்தும் முறைகள், கட்டுப்பாடுகள் மற்றும் முன்னெச்சரிக்கைகள் பற்றிய அதிகாரப்பூர்வப் பட்டியலுக்கு எப்போதும் தயாரிப்பு லேபிளைப் பார்க்கவும். விரும்பிய முடிவுகளைப் பெற, கொடுக்கப்பட்ட வழிமுறைகளை கவனமாக படித்து பின்பற்றவும்.

இந்த தயாரிப்பின் பயன்பாடு எங்கள் கட்டுப்பாட்டிற்கு அப்பால் இருப்பதால், தயாரிப்பின் சீரான தரம் தவிர நாங்கள் எந்த உத்தரவாதத்தையும் அளிக்கவில்லை.

முழு பயிர் பட்டியல்

  • உருளைக்கிழங்கு