எஃப்எம்சி, ஒரு அதிநவீன தொழில்நுட்ப கண்டுபிடிப்பாளராக இருப்பதை தவிர, தனிப்பயனாக்கப்பட்ட மற்றும் நிலையான விவசாய தீர்வுகளின் உதவியுடன் விவசாயிகளுக்கு ஆதரவளிப்பதன் மூலம் இந்தியாவில் கிராமப்புற சமூகங்களின் வளர்ச்சி மற்றும் மேம்பாட்டிற்காகவும் இது உறுதியளிக்கப்பட்டுள்ளது.
எஃப்எம்சி ஆனது யுனைடெட் நேஷன் உடன் இணைந்து நிலையான வளர்ச்சி இலக்கு (எஸ்டிஜி) 6.1 க்கு உறுதிபூண்டுள்ளது, இது 2030 ஆண்டிற்குள் அனைவருக்கும் பாதுகாப்பான மற்றும் குறைந்த செலவில் குடிநீரைப் பெற்றுத் தர முயல்கிறது. ஒரு யுஎன் அறிக்கையின்படி, நீர் தரக் குறியீட்டில் 122 நாடுகளில் இந்தியா 120 வது இடத்தில் உள்ளது, மேலும் இந்தியாவில் நீர் விநியோகத்தில் சுமார் 70 சதவீதம் மாசுபடுவதற்கான அச்சுறுத்தலுக்கு உள்ளாகியுள்ளது. இந்தியாவில் போதிய பாதுகாப்பில்லாத குடிநீர் நாட்டின் ஆரோக்கியம், சமூக மற்றும் பொருளாதாரத் துறைகளை பாதிக்கிறது.
இந்தியாவில் உள்ள 163 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் தங்கள் அன்றாடத் தேவைகளைப் பூர்த்தி செய்ய குடிநீரைப் பெறுவதில்லை. இதன் விளைவாக, இந்தியாவில் கிட்டத்தட்ட 400 மில்லியன் மக்கள் நீர்வழி நோய்களால் பாதிக்கப்படுகின்றனர் மற்றும் ஒவ்வொரு நாளும் வயிற்றுப்போக்கால் 500 க்கும் மேற்பட்ட குழந்தைகள் இறக்கின்றனர். ஒவ்வொரு வருடமும் அரை பில்லியன் டாலர் மதிப்புள்ள வேலை நாட்கள் நீரினால் பரவும் நோய்களால் இழக்கப்படுகின்றன, அதோடு தொலைதூர மற்றும் பெரும்பாலும் பாதுகாப்பற்ற இடங்களிலிருந்து தண்ணீர் எடுக்க பெண்கள் மற்றும் சிறுமிகள் செலவிடும் மில்லியன் கணக்கான மணிநேரங்களில் உற்பத்தித்திறனை இழக்கிறது. உத்தரப்பிரதேச மாநிலத்தில் உள்ள கிராமப்புறங்களில் வாழும் 70% மக்களிடையே தண்ணீர் பிரச்சினை மிகவும் கடுமையாக உள்ளது.
இந்தியாவில் கிராமப்புற மக்களுக்கு குடிநீரை பெற்றுத் தர எஃப்எம்சி நிறுவனம் பல வருடத் திட்டமான - சமர்த் திட்டத்தை எடுத்துள்ளது. சமர்த் (சமர்த் என்றால் அதிகாரம் என்று பொருள் இது ஒரு ஹிந்தி வார்த்தை ஆகும்) 2019 ஆம் ஆண்டு உத்திரபிரதேசத்தில் இருந்து ஆரம்பிக்கப்பட்டு, இப்போது இந்தியாவில் அதிக மாநிலங்களுக்கு விரிவுபடுத்தப்படுகிறது.
ஹைலைட்ஸ் பேஸ் 1, 2019
- உத்திரபிரதேசத்தில் நிறுவப்பட்டுள்ள 15 நீர் வடிகட்டுதல் ஆலைகள், ஒரு மணி நேரத்திற்கு 2000 லிட்டர் வடிகட்டும் திறன் கொண்டது; ஒரு நாள் ஒன்றுக்கு 48 kl ஆகும்.
- 60 பயனாளி கிராமங்கள், ஏறக்குறைய 40000 ஏழை விவசாய குடும்பங்கள் சேவையில் பயனடைகின்றனர்.
- டிஸ்பென்சிங் யூனிட்கள் ஸ்வைப் கார்டுகள் மூலம் கட்டுப்படுத்தப்படுகின்றன. ஒவ்வொரு ஸ்வைப்பும் 20 லிட்டர்களை வெளியிடுகிறது.
- ஒவ்வொரு குடும்பமும் ஒரு நாளுக்கு 18-20-liter தண்ணீர் ஒதுக்கீட்டுடன் ஒரு ஸ்வைப் கார்டை பெறுகிறார்கள்.
- கோ-ஆபரேட்டிவ் அடிப்படையில் கிராம கம்யூனிட்டி மூலம் ஆலைகள் நிர்வகிக்கப்படுகின்றன. எஃப்எம்சி ஊழியர்கள் பயிற்சி மற்றும் மேலாண்மை குறித்த உள்ளூர் சமூகங்களை ஆதரிக்கின்றனர்.
ஹைலைட்ஸ் பேஸ் 2, 2020
- உத்தரபிரதேசத்தில் 20 கம்யூனிட்டி நீர் வடிகட்டுதல் ஆலைகள் நிறுவப்பட்டுள்ளன.
- பஞ்சாப் மாநிலத்தில் 9 கம்யூனிட்டி நீர் வடிகட்டுதல் ஆலைகள் நிறுவப்பட்டுள்ளன.
- 100 பயனாளி கிராமங்கள், 80, 000 ஏழை விவசாய குடும்பங்களுக்கு சேவை செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளன.
- டிஸ்பென்சிங் யூனிட்கள் ஸ்வைப் கார்டுகள் மூலம் கட்டுப்படுத்தப்படுகின்றன. ஒவ்வொரு ஸ்வைப்பும் 20 லிட்டர்களை வெளியிடுகிறது.
- ஒவ்வொரு குடும்பமும் ஒரு நாளுக்கு 18-20-liter தண்ணீர் ஒதுக்கீட்டுடன் ஒரு ஸ்வைப் கார்டை பெறுகிறார்கள்.
- எஃப்எம்சி ஊழியர் பயிற்சி மற்றும் நிர்வாகத்தில் உள்ளூர் சமூகங்களை ஆதரிக்கின்றனர்.