ஆசியாவில், குறிப்பாக இந்தியாவில் விவசாயத்தில் பெண்கள் ஒரு வலிமையான உந்து சக்தியாக உள்ளனர். கிராமப்புற இந்தியாவில், விவசாயத்தை நம்பி வாழும் பெண்களின் சதவீதம் 84% அளவுக்கு அதிகமாக உள்ளது. சாகுபடியாளர்களில் 33% பெண்களும், விவசாயத் தொழிலாளர்களில் 47% சதவீதமும் பெண்கள் உள்ளனர் (நாட்டில் கால்நடை, மீன்வளம் மற்றும் உணவு உற்பத்தியின் பல்வேறு துணை வகைகளை தவிர்த்து). 2009 ஆம் ஆண்டில், பயிர் சாகுபடியில் 94% பெண் விவசாய தொழிலாளர் சிறுதானிய உற்பத்தியில் இருந்துள்ளனர்.
தொழிலாளர் சக்தியில் தங்கள் ஆதிக்கம் இருந்தபோதிலும், இந்தியாவில் பெண்கள் ஊதியம், நில உரிமைகள் மற்றும் உள்ளூர் உழவர் அமைப்புகளில் பிரதிநிதித்துவம் ஆகியவற்றின் அடிப்படையில் இன்னும் பெரும் பாதகத்தை எதிர்கொள்கின்றனர். மேலும், அவர்களின் அதிகாரமின்மை பெரும்பாலும் அவர்களின் குழந்தைகளுக்கு குறைந்த கல்வி பெறுதல் மற்றும் மோசமான குடும்ப ஆரோக்கியம் போன்ற எதிர்மறை வெளிப்பாடுகளை விளைவிக்கிறது.
மேற்கூறியவற்றை மனதில் கொண்டு, எஃப்.எம்.சி இந்தியாவில் விவசாயத்தில் பெண்களிடையே திறனை வளர்க்கும் திட்டத்தில் வேலை செய்கிறது, அவர்கள் சொந்தக் காலில் நிற்கவும், தேசத்தைக் கட்டியெழுப்பவும் பங்களிக்கிறார்கள்.